திங்கள், நவம்பர் 02, 2026
உண்மையின் குரல்
சினிமா

‘வேட்டுவம்’ படத்தில் ஸ்ருதிஹாசன் கேமியோ? ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்கும் எதிர்பார்ப்பு!

‘வேட்டுவம்’ படத்தில் ஸ்ருதிஹாசன் கேமியோ? ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்கும் எதிர்பார்ப்பு!

 

 

பா. ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, தினேஷ் உள்ளிட்டோர் நடித்து வரும் திரைப்படம் ‘வேட்டுவம்’. கேங்ஸ்டர் மற்றும் அறிவியல் புனைவு அம்சங்களுடன் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. படத்தில் இடம்பெறும் கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தும் ‘வேர்ட் ஆப் வேட்டுவம்’ வீடியோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

 

இந்த நிலையில், நடிகை ஸ்ருதிஹாசன் இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், அவர் நடிப்பது குறித்து படக்குழு இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இதனால், ஸ்ருதிஹாசன் இப்படத்தில் இடம்பெறுவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.