வெள்ளி, அக்டோபர் 16, 2026
உண்மையின் குரல்
அரசியல்

135 கிலோ போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தவெக நிர்வாகி கைது: உதயநிதி ஸ்டாலின் கடும் விமர்சனம்!

135 கிலோ போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தவெக நிர்வாகி கைது: உதயநிதி ஸ்டாலின் கடும் விமர்சனம்!

 

 

135 கிலோ போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில், திமுக தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆட்சிக்கு வந்ததும் போதைப்பொருள் பயன்பாட்டை ஒழிப்பதாகக் கூறிய முதலமைச்சர், தனது கட்சியினர் தொடர்புடைய விவகாரங்களில் என்ன நடவடிக்கை எடுக்கிறார் எனக் கேள்வி எழுப்பியுள்ளார். போதை ஒழிப்பு தொடர்பான அரசின் நிலைப்பாட்டையும் அவர் விமர்சித்துள்ளார்.

 

மேலும், முதலமைச்சர் “Drugs-ஐ விடு, Sports-ஐ எடு” என்ற முழக்கத்துடன் மாரத்தானில் பங்கேற்கும் நிலையில், அவரது கட்சியினர் அதற்கு மாறாகச் செயல்படுவதாக உதயநிதி ஸ்டாலின் சாடியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பான கைது மற்றும் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடைபெறும் நிலையில், அரசியல் தலைவர்களின் கருத்துகள் கவனம் பெற்றுள்ளன.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.