6 பைக்குகளால் உடலை இழுக்கும் ஆபத்தான சாகசம்; மூச்சுத்திணறி கீழே விழுந்த நபர்!

பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தும் நோக்கில், கழுத்து மற்றும் உடலில் கயிறுகளைக் கட்டிக்கொண்டு 6 பைக்குகளின் உதவியுடன் இழுக்கப்படும் ஆபத்தான சாகசத்தில் ஈடுபட்ட நபர் உயிராபத்தை எதிர்கொண்டார். பைக்குகள் வெவ்வேறு திசைகளில் இழுக்கத் தொடங்கியபோது, உடலில் கட்டப்பட்டிருந்த கயிறுகள் இறுகியதால் அவர் மூச்சுவிட முடியாமல் தடுமாறி கீழே விழுந்தார். தொடர்ந்து தரையில் இழுத்துச் செல்லப்பட்டதால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
நிலைமை விபரீதமாவதை உணர்ந்த பார்வையாளர்கள் உடனடியாக ஓடிச் சென்று பைக்குகளை நிறுத்தி, அந்த நபரை மீட்க முயன்றனர். இந்தச் சம்பவம் தொடர்பான பதற்றமான காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. பார்வையாளர்களைக் கவரும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இதுபோன்ற ஆபத்தான சாகசங்கள் உயிருக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல் இத்தகைய முயற்சிகளில் ஈடுபடுவது தவிர்க்கப்பட வேண்டும்.




கருத்துகள் (0)