பினராயி விஜயனுக்கு அமலாக்கத்துறை சம்மன்: பணப்பரிவர்த்தனை வழக்கில் அடுத்த வாரம் ஆஜராக உத்தரவு!

கேரளாவில் கொச்சியைச் சேர்ந்த சிஎம்ஆர்எல் நிறுவனத்துக்கும், பினராயி விஜயனின் மகள் வீணா விஜயனின் எக்சாலாஜிக் நிறுவனத்துக்கும் இடையேயான பணப்பரிவர்த்தனை தொடர்பான வழக்கில், முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அடுத்த வாரம் விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, இந்த விவகாரத்தில் பினராயி விஜயன், அவரது மகள் வீணா விஜயன் மற்றும் முகம்மது ரியாஸ் ஆகியோரிடம் விசாரணை நடத்த கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து பினராயி விஜயன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த நிலையில், அமலாக்கத்துறையின் சம்மன் காரணமாக இந்த வழக்கு மீண்டும் கவனம் பெற்றுள்ளது.




கருத்துகள் (0)