வியாழன், நவம்பர் 05, 2026
உண்மையின் குரல்
இந்தியா

7 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் திருத்தம்.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

7 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் திருத்தம்.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

அருணாச்சலப் பிரதேசம், மிசோரம், ஒடிசா, சிக்கிம் ஆகிய 4 மாநிலங்கள் மற்றும் சண்டிகர், தாத்ரா நகர் ஹவேலி, டாமன் டையூ ஆகிய யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகளை (SSR) மேற்கொள்ள இந்தியத் தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பையும் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

 

இந்தத் திருத்தப் பணிகளுக்குப் பிறகு தயாரிக்கப்படும் வரைவு வாக்காளர் பட்டியல் வரும் நவம்பர் 30-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. பொதுமக்களின் கோரிக்கைகள் மற்றும் தேவையான திருத்தங்கள் பரிசீலிக்கப்பட்டு, இறுதி வாக்காளர் பட்டியல் 2027 ஜனவரி 21-ஆம் தேதி வெளியிடப்படும் எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.