வெள்ளி, நவம்பர் 06, 2026
உண்மையின் குரல்
இந்தியா

DRDO-வின் பிரளய் ஏவுகணை சோதனை வெற்றி.. 500 கி.மீ. தூரம் வரை தாக்கும் திறன்!

DRDO-வின் பிரளய் ஏவுகணை சோதனை வெற்றி.. 500 கி.மீ. தூரம் வரை தாக்கும் திறன்!

இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான DRDO, உள்நாட்டிலேயே தயாரித்த பிரளய் குவாசி பாலிஸ்டிக் ஏவுகணையை ஒடிசா கடற்கரையில் உள்ள டாக்டர் அப்துல் கலாம் தீவில் வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ளது. நவம்பர் 5-ஆம் தேதி காலை 11.10 மணிக்கு நடைபெற்ற இந்தச் சோதனையில் நிர்ணயிக்கப்பட்ட அனைத்து இலக்குகளையும் ஏவுகணை துல்லியமாக எட்டியது. சுமார் 150 முதல் 500 கிலோமீட்டர் தொலைவு வரை சென்று தாக்கும் திறன் கொண்ட பிரளய் ஏவுகணை, பல்வேறு வகையான மரபுவழி வெடிகுண்டுகளைச் சுமந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட இந்த ஏவுகணையின் வெற்றிகரமான சோதனை இந்தியாவின் பாதுகாப்புத் துறை வளர்ச்சியில் முக்கிய நிகழ்வாக அமைந்துள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.