அமெரிக்க இடைத்தேர்தல்: டிரம்ப் கட்சிக்கு எலான் மஸ்க் ரூ.2,617 கோடி நிதியுதவி!

அமெரிக்காவில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு, அதிபர் டொனால்ட் டிரம்பின் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த குழுக்கள் மற்றும் ‘அமெரிக்கா பிஏசி’ அமைப்புக்கு தொழிலதிபர் எலான் மஸ்க் ரூ.2,617 கோடி நிதியுதவி வழங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிதிப் பங்களிப்பு மூலம், அமெரிக்க அரசியலில் முக்கிய நன்கொடையாளராக மஸ்க் உருவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இடைத்தேர்தலில் குடியரசுக் கட்சிக்கு ஆதரவு திரட்டும் நோக்கில் இந்த நிதி பயன்படுத்தப்படலாம் எனக் கூறப்படும் நிலையில், மஸ்கின் அரசியல் நிதிப் பங்களிப்பு அமெரிக்க அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. தேர்தல் களம் சூடுபிடித்துள்ள சூழலில், இவ்வளவு பெரிய தொகை வழங்கப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் அரசியல் விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது.




கருத்துகள் (0)