பாகிஸ்தானில் ரயில் தடம் புரண்டு விபத்து: 6 பேர் பலி; 30-க்கும் மேற்பட்டோர் காயம்!

பாகிஸ்தானில் கராச்சியிலிருந்து பெஷாவர் நோக்கிச் சென்ற ரஹ்மான் பாபா எக்ஸ்பிரஸ் ரயில், பஞ்சாப் மாகாணத்தின் முல்தான் அருகே இன்று காலை தடம் புரண்டு விபத்துக்குள்ளானதாகத் தகவல் வெளியாகியுள்ளது. எதிர்பாராத இந்த விபத்தால் ரயிலில் பயணம் செய்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதில் 6 பேர் உயிரிழந்ததாகவும், 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைகளில் அனுமதித்தனர். அவர்களுக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ரயில் தடம் புரண்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




கருத்துகள் (0)