திங்கள், நவம்பர் 02, 2026
உண்மையின் குரல்
அரசியல்

அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் அதிமுக போட்டியா? வெள்ளத்துரை வேட்பாளராக களமிறங்க வாய்ப்பு!

அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் அதிமுக போட்டியா? வெள்ளத்துரை வேட்பாளராக களமிறங்க வாய்ப்பு!

அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக களமிறங்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் காவல்துறை அதிகாரி வெள்ளத்துரை சமீபத்தில் அதிமுகவில் இணைந்துள்ள நிலையில், அவரை வேட்பாளராக அறிவிக்க கட்சி தலைமை ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.

 

ஏற்கனவே அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிடப் போவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்திருந்தார். மேலும், திமுக மற்றும் அதிமுக ஆதரவுடன் அவர் போட்டியிட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் பரவின. இந்நிலையில், அதிமுக தனித்துப் போட்டியிடத் திட்டமிட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் சீமானுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.