வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மாற்றுத்திறனாளி இளைஞர் சரமாரியாக வெட்டிக் கொலை!

வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே உள்ள எல்.ஜி.புதூர் பகுதியில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மாற்றுத்திறனாளி இளைஞர் ஒருவர் மர்ம நபர்களால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தினகரன் என்ற இளைஞர் இரவு நேரத்தில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது, அங்கு திடீரென நுழைந்த மர்ம கும்பல் அவரை சரமாரியாக வெட்டித் தாக்கியதாகக் கூறப்படுகிறது. கொலை செய்த பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். முதற்கட்ட விசாரணையில், சொத்து தொடர்பான தகராறு காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இருப்பினும், கொலைக்கான உண்மையான காரணம் மற்றும் இதில் தொடர்புடைய நபர்கள் யார் என்பது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.




கருத்துகள் (0)