திருப்பரங்குன்றம் 144 தடை வழக்கு விசாரணை.. தமிழக அரசுக்கு நீதிபதிகள் காட்டமான பதில்!

திருப்பரங்குன்றம் மலையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு, மதுரை உயர் நீதிமன்ற கிளையில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை உயர்நீதிமன்றம் விசாரிக்கக் கூடாது என தமிழக அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால், உயர்நீதிமன்ற கிளை மேற்கொண்டு விசாரணை நடத்துவது சரியான நடைமுறை அல்ல என அரசு தரப்பு வாதத்தை முன்வைத்தது.
இதற்கு பதிலளித்த நீதிபதிகள், வழக்கை விசாரிக்கக் கூடாது என அரசு கருதினால், விசாரணையில் தலையிடாமல் அமைதியாக இருக்கலாம் என்றும், நீதிமன்றம் தனது பணியை மேற்கொள்ளும் என்றும் கடுமையாகத் தெரிவித்தனர். தமிழக அரசின் எதிர்ப்புக்கு நீதிபதிகள் அளித்த இந்த பதில், நீதிமன்ற விசாரணையின்போது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் திருப்பரங்குன்றம் 144 தடை உத்தரவு தொடர்பான வழக்கு விசாரணையில் கவனம் திரும்பியுள்ளது.




கருத்துகள் (0)