திங்கள், நவம்பர் 02, 2026
உண்மையின் குரல்
உலகம்

ஆப்பிரிக்க நாடான கானாவில் 2,000 மெகாவாட் அணுமின் நிலையம் அமைக்க ரஷியா ஒப்பந்தம்!

ஆப்பிரிக்க நாடான கானாவில் 2,000 மெகாவாட் அணுமின் நிலையம் அமைக்க ரஷியா ஒப்பந்தம்!

ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுடனான தனது உறவுகளை வலுப்படுத்தி வரும் ரஷியா, ஆப்பிரிக்க நாடான கானாவில் 2,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட அணுமின் நிலையத்தை அமைக்க ஒப்பந்தம் செய்துள்ளது. மாஸ்கோவில் நடைபெற்று வரும் ரஷியா-ஆப்பிரிக்கா உச்சி மாநாட்டில் இந்தக் கூட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

 

இதனுடன், கானா நாட்டின் ராணுவத்திற்குத் தேவையான நவீன ஆயுதங்களை வழங்கவும் ரஷியா ஒப்புக்கொண்டுள்ளது. இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான எரிசக்தி மற்றும் பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.