பெற்றோர் இல்லாத இளைஞரின் திருமணம்... இணைய வேண்டுகோளுக்கு ஒன்றுதிரண்ட ஊர் மக்கள்! நெகிழ்ச்சியில் மணமக்கள்!

சீனாவில் பெற்றோர் மற்றும் உறவினர்களின் துணையின்றி வாழ்ந்து வந்த சியோ சியோ சு என்ற இளைஞரின் திருமணம், தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. தனது திருமணத்தை நடத்துவதற்கு உதவ யாரும் இல்லாத நிலையில், இணையதளம் வாயிலாக பொதுமக்களிடம் அவர் உதவி கோரியிருந்தார். இந்த வேண்டுகோளைப் பார்த்த அப்பகுதி மக்கள் பலரும் தாமாக முன்வந்து அவருக்கு உதவிக்கரம் நீட்டினர்.
மணமக்களுக்கு முன்பின் அறிமுகமில்லாத ஏராளமான பொதுமக்கள் திருமண நிகழ்ச்சியில் நேரடியாகப் பங்கேற்று, சமையல் செய்வது, திருமண அரங்கத்தை அலங்கரிப்பது, விருந்தினர்களுக்கு உணவு பரிமாறுவது உள்ளிட்ட பல்வேறு பணிகளைப் பொறுப்பேற்று செய்தனர். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒரு இளைஞரின் வாழ்க்கையில் மகிழ்ச்சியான தருணத்தை உருவாக்க ஊர் மக்கள் ஒன்றிணைந்து செயல்பட்டது பலரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது. மனிதநேயத்திற்கும் சமூக ஒற்றுமைக்கும் எடுத்துக்காட்டாக அமைந்துள்ள இந்தச் சம்பவம் இணையத்தில் பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது.




கருத்துகள் (0)