திங்கள், நவம்பர் 02, 2026
உண்மையின் குரல்
உலகம்

சர்வதேச சந்தையில் உயர்ந்த தங்கம், வெள்ளி விலை..!

சர்வதேச சந்தையில் உயர்ந்த தங்கம், வெள்ளி விலை..!

சர்வதேச சந்தையில் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வந்த தங்கத்தின் விலை, வாரத்தின் முதல் நாளான இன்று (நவம்பர் 2) மீண்டும் ஏற்றம் கண்டுள்ளது. ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 13.46 டாலர் உயர்ந்து 3,901.86 டாலராக விற்பனை செய்யப்படுகிறது.

 

இதேபோல், வெள்ளியின் விலையும் 0.63 டாலர் அதிகரித்து 49.85 டாலராக உள்ளது. சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த விலை உயர்வின் தாக்கம் இந்திய சந்தையிலும் எதிரொலிக்கலாம் என்றும், இன்று உள்நாட்டில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் சற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.