புதன், அக்டோபர் 14, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அடிப்படைத் திறன் தேர்வு கட்டாயம்! ‘திறன் ப்ளஸ்’ திட்டம் அறிமுகம்!

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அடிப்படைத் திறன் தேர்வு கட்டாயம்! ‘திறன் ப்ளஸ்’ திட்டம் அறிமுகம்!

 

 

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவை மேம்படுத்தும் நோக்கில், தமிழக பள்ளிக்கல்வித்துறை ‘திறன் ப்ளஸ்’ என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதன் கீழ், 2 முதல் 9ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு அடிப்படைத் திறன்களை மதிப்பிடும் தேர்வு நடத்தப்பட உள்ளது. சுமார் 40 நிமிடங்கள் நடைபெறும் இந்தச் சோதனையில் 10 கேள்விகள் இடம்பெறும் எனக் கூறப்படுகிறது.

 

மாணவர்களுக்கு தமிழ், ஆங்கில எழுத்துகளைப் படிக்கும் திறன் உள்ளதா, கூட்டல் மற்றும் கழித்தல் போன்ற அடிப்படைக் கணிதச் செயல்பாடுகளைச் செய்யத் தெரிகிறதா என்பவை மதிப்பிடப்படும். மாணவர்களின் கற்றல் குறைபாடுகளைக் கண்டறிந்து, அவர்களின் திறனை மேம்படுத்தும் வகையில் சிறப்பு வகுப்புகளும் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.