திங்கள், நவம்பர் 02, 2026
உண்மையின் குரல்
உலகம்

ஒரே ஆண்டில் 1,207 திரைப்படங்கள் பார்த்து கின்னஸ் சாதனை! முந்தைய சாதனையை முறியடித்த அமெரிக்க இளைஞர்!

ஒரே ஆண்டில் 1,207 திரைப்படங்கள் பார்த்து கின்னஸ் சாதனை! முந்தைய சாதனையை முறியடித்த அமெரிக்க இளைஞர்!

அமெரிக்காவைச் சேர்ந்த கிளென்வுட் ஹோஸ்கின் என்ற இளைஞர், ஒரே ஆண்டில் திரையரங்குகளில் 1,207 திரைப்படங்களைப் பார்த்து புதிய கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார். திரைப்படங்களைப் பார்க்கும்போது செல்போன் உள்ளிட்ட எந்தவிதமான கவனச்சிதறல்களும் இல்லாமல், முழுமையாகப் படத்தைப் பார்க்க வேண்டும் என்ற விதிமுறைகளைப் பின்பற்றி இந்தச் சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார்.

 

இதற்கு முன்பு சாக் சுவோப் என்பவர் ஒரே ஆண்டில் 777 திரைப்படங்களைப் பார்த்ததே சாதனையாக இருந்தது. தற்போது 1,207 திரைப்படங்களைப் பார்த்து அந்தச் சாதனையை முறியடித்த கிளென்வுட் ஹோஸ்கினுக்கு கின்னஸ் உலக சாதனைக்கான சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.