வியாழன், நவம்பர் 05, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

சென்னை காவல் நிலையத்தில் இருந்து 17 வயது சிறுவன் தப்பியோட்டம்!

சென்னை காவல் நிலையத்தில் இருந்து 17 வயது சிறுவன் தப்பியோட்டம்!

சென்னை வானகரம் காவல் நிலையத்தில் இருந்து 17 வயது இளஞ்சிறார் கைதி தப்பிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வழிப்பறி சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட அந்தச் சிறுவனை போலீசார் அழைத்துச் சென்றபோது, எதிர்பாராத விதமாக அவர்களின் பிடியிலிருந்து தப்பி ஓடியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

 

இதனைத் தொடர்ந்து தப்பியோடிய சிறுவனை மீண்டும் பிடிப்பதற்காக போலீசார் தனிப்படை அமைத்துள்ளனர். பல்வேறு இடங்களில் தேடுதல் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், காவல் நிலையத்தில் இருந்து கைது செய்யப்பட்ட சிறுவன் தப்பிச் சென்றது எப்படி என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.