வியாழன், நவம்பர் 05, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

கல்லால் தாக்கப்பட்ட இளைஞர் உயிரிழப்பு; கொலை வழக்காக மாற்றிய போலீசார்!

கல்லால் தாக்கப்பட்ட இளைஞர் உயிரிழப்பு; கொலை வழக்காக மாற்றிய போலீசார்!

திருநெல்வேலி மாநகரம் ஜாமியா பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த அப்துல் அஜீஸ் (25), கடந்த அக்டோபர் 31ஆம் தேதி இரவு அப்பகுதியில் உள்ள உணவகம் ஒன்றின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சில இளைஞர்களுக்கும் அவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த மோதலின்போது இளைஞர்கள் கல்லால் தாக்கியதில் அப்துல் அஜீஸ் பலத்த காயமடைந்தார்.

 

இதையடுத்து அவர் உடனடியாக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அப்துல் அஜீஸ் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக ஏற்கெனவே மூன்று பேரை கைது செய்துள்ள போலீசார், முதலில் பதிவு செய்யப்பட்ட கொலை முயற்சி வழக்கை தற்போது கொலை வழக்காக மாற்றி, தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.