புதன், அக்டோபர் 14, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

சென்னையில் 1,000 ஏசி மின்சாரப் பேருந்துகள் கொள்முதல் டெண்டர் ரத்து!

சென்னையில் 1,000 ஏசி மின்சாரப் பேருந்துகள் கொள்முதல் டெண்டர் ரத்து!

 

 

சென்னையில் பொதுப் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், புதிதாக 1,000 குளிர்சாதன வசதி கொண்ட மின்சாரப் பேருந்துகளை வாங்குவதற்காக முந்தைய திமுக ஆட்சியில் வெளியிடப்பட்ட டெண்டரைத் தமிழக அரசு ரத்து செய்துள்ளது. இதன் மூலம், இந்தப் பேருந்துகளைக் கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கை தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

 

டெண்டர் ரத்து செய்யப்பட்டது குறித்து விளக்கம் அளித்துள்ள சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம், நிர்வாகக் காரணங்களுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளது. சென்னையில் பயணிகளுக்கான பொதுப் போக்குவரத்து வசதிகளை விரிவுபடுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தப் பேருந்துகள் வாங்கத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், டெண்டர் ரத்து செய்யப்பட்டிருப்பது கவனத்தைப் பெற்றுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.