சென்னையில் ஒரு மணி நேரத்தில் 7 செ.மீ.க்கும் அதிகமாகக் கொட்டிய கனமழை! வடசென்னையில் சாலைகளில் வெள்ளம்!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வரும் நிலையில், வடசென்னையின் சில இடங்களில் குறுகிய நேரத்தில் தீவிர கனமழை பதிவாகியுள்ளது. இன்று மாலை 6 மணி முதல் 7 மணி வரையிலான ஒரு மணி நேரத்தில் தண்டையார்பேட்டையில் 7.3 செ.மீ. மழை பெய்துள்ளது. கொரோனேஷன் நகரில் 7 செ.மீ. மழையும், திருவொற்றியூரில் 6.9 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறுகிய நேரத்தில் கொட்டித்தீர்த்த மழையால் பல இடங்களில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமங்களைச் சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கும் வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும், மழைநீர் தேங்கிய சாலைகளில் பயணிக்கும்போது கவனமாகச் செயல்படவும் அறிவுறுத்தப்படுகிறது.




கருத்துகள் (0)