இந்தியா - இலங்கை முதல் ஒருநாள் போட்டி நடைபெறும் இடம் மாற்றம்!

இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதவுள்ள முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெறும் இடத்தை மாற்றி BCCI அறிவிப்பு வெளியிட்டுள்ளது. டிசம்பர் 13ஆம் தேதி நடைபெறவிருந்த இந்தப் போட்டி, ஏற்கனவே டெல்லியில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், சில நிர்வாக காரணங்களைக் கருத்தில் கொண்டு போட்டியை டெல்லியில் இருந்து விசாகப்பட்டினத்துக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) தெரிவித்துள்ளது. போட்டி நடைபெறும் இடத்தில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், போட்டி ஏற்பாடுகள் மற்றும் அட்டவணை தொடர்பான கூடுதல் விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.




கருத்துகள் (0)