ஜப்பானில் இன்று தொடங்கும் பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகள்! இந்தியக் கொடியை ஏந்தும் பிரமோத் பகத், சிம்ரன் சர்மா!

மாற்றுத்திறனாளி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் 5-வது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானின் நகோயா நகரில் இன்று (அக்.18) தொடங்கி வரும் 24-ம் தேதி வரை நடைபெறுகின்றன. இந்தியா உள்ளிட்ட 45 நாடுகளைச் சேர்ந்த சுமார் 3,000 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் இந்தப் போட்டியில், இந்தியா சார்பில் 168 பேர் 11 வகையான விளையாட்டுகளில் திறமையை வெளிப்படுத்த உள்ளனர்.
இப்போட்டியின் தொடக்க விழாவில் இந்தியக் கொடியை ஏந்திச் செல்லும் பெருமை பாரா ஒலிம்பிக் சாம்பியன் பிரமோத் பகத் மற்றும் ஓட்டப்பந்தய வீராங்கனை சிம்ரன் சர்மா ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச அரங்கில் இந்திய வீரர்கள் பதக்கங்களைக் குவிப்பார்கள் என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் போட்டிகளை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.




கருத்துகள் (0)