“கிளைச் செயலாளர் வரை குதிரைபேரம் நடத்தி ஆட்களை அழைக்கிறது தவெக” – இபிஎஸ் விமர்சனம்!

தவெக மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்தவர்களைத் தங்கள் பக்கம் சேர்க்க குதிரைபேரத்தில் ஈடுபடுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முன்பு எம்எல்ஏக்கள் தொடர்பாகப் பேசப்பட்ட நிலையில், தற்போது கிளைச் செயலாளர்கள் வரையிலும் ஆட்களைச் சேர்க்கும் முயற்சி நடைபெறுவதாக விமர்சித்தார்.
இடைத்தேர்தலில் போட்டியிடாத பாமக, தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெற்றதாகக் கூறுவது குறித்தும் இபிஎஸ் கருத்து தெரிவித்தார். கட்சி மேலும் வலுப்பெற பாமக தனது செயல்பாடுகளைச் சுயபரிசோதனை செய்ய வேண்டும் என்றார். முன்னதாக, அதிமுக தன்னைச் சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியிருந்த நிலையில், அதற்குப் பதிலளிக்கும் வகையில் இபிஎஸ் பேசியுள்ளார்.




கருத்துகள் (0)