திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றக் கோரி ஆட்சியருக்கு அவசர சட்ட நோட்டீஸ்!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் நாளை கார்த்திகை தீபத்தை ஏற்ற வலியுறுத்தி, வழக்கறிஞர் கே.கே.ரமேஷ் மதுரை மாவட்ட ஆட்சியருக்கு அவசர சட்ட நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
கடந்த நவம்பர் 20ஆம் தேதி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவை எவ்வித தடையும் இன்றி நடைமுறைப்படுத்த வேண்டும் என அவர் தனது நோட்டீஸில் வலியுறுத்தியுள்ளார். நீதிமன்ற உத்தரவின்படி தீபம் ஏற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், நாளை தீபத்தூணில் தீபம் ஏற்றப்படாவிட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த அவசர சட்ட நோட்டீஸை மதுரை மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபிரபாவிடம் அவர் நேரில் வழங்கியுள்ளார்.




கருத்துகள் (0)