வெள்ளி, நவம்பர் 06, 2026
உண்மையின் குரல்
சினிமா

கொச்சியில் அவசர சிகிச்சைக்கு அழைத்து இளம் மருத்துவரிடம் கொள்ளை: நடிகை அதுல்யா சந்திரா உட்பட 3 பேர் கைது!

கொச்சியில் அவசர சிகிச்சைக்கு அழைத்து இளம் மருத்துவரிடம் கொள்ளை: நடிகை அதுல்யா சந்திரா உட்பட 3 பேர் கைது!

 

கேரள மாநிலம் கொச்சியில் அவசர மருத்துவ உதவி தேவைப்படுவதாகக் கூறி வரவழைக்கப்பட்ட இளம் மருத்துவர், தாக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த நவம்பர் 2ஆம் தேதி நடைபெற்றதாகக் கூறப்படும் இந்தச் சம்பவத்தில், மலையாள நடிகையும் வழக்கறிஞருமான அதுல்யா சந்திரா உள்ளிட்டோர் மருத்துவரைத் தாக்கி, அவரிடம் இருந்த உடைமைகள் மற்றும் அலைபேசிகளைப் பறித்ததாகப் புகார் எழுந்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக அதுல்யா சந்திரா மற்றும் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் 12 பேர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள மற்ற 9 பேரையும் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

அவசர மருத்துவ உதவி என்ற பெயரில் மருத்துவரை வரவழைத்து தாக்கி, உடைமைகளைக் கொள்ளையடித்ததாக எழுந்துள்ள இந்தப் புகார் கொச்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினரின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

 

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.