பெங்களூரு மருத்துவமனையில் அண்ணனை நேரில் சந்தித்த ரஜினிகாந்த்!

பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது மூத்த சகோதரர் சத்யநாராயணா ராவ் கெய்க்வாட்டை நடிகர் ரஜினிகாந்த் நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தார். அப்போது அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் மற்றும் தற்போதைய உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொண்டார்.
சிறு வயது முதல் தனது வாழ்க்கையில் முக்கிய வழிகாட்டியாகவும், ஆதரவாகவும் இருந்து வரும் அண்ணனை நேரில் சந்தித்து ரஜினிகாந்த் அன்புடன் நலம் விசாரித்தது குடும்பத்தினர் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




கருத்துகள் (0)