கோஸ்டாரிகாவில் புதிய தூதரகம் தொடங்கிய இந்தியா! வர்த்தகம், முதலீட்டை மேம்படுத்தத் திட்டம்!

மத்திய அமெரிக்க நாடான கோஸ்டாரிகாவின் தலைநகர் சான் ஜோஸில் இந்தியா தனது புதிய தூதரகத்தின் செயல்பாடுகளைத் தொடங்கியுள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதன் மூலம் கோஸ்டாரிகாவுடனான இந்தியாவின் வெளியுறவுத் தொடர்புகளை மேலும் வலுப்படுத்தவும், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் ‘ஃபோகஸ் லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன்’ திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக, வர்த்தகம், முதலீடு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் மருந்தாக்கம் உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது முக்கிய நோக்கமாகும். புதிய தூதரகத்தின் செயல்பாடுகள் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் தூதரக உறவுகள் புதிய வளர்ச்சியைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.




கருத்துகள் (0)