வெள்ளி, நவம்பர் 27, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

மருமகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கியதாக மாமனார் மீது புகார் கணவர் மற்றும் மாமியார் மீதும் வழக்கு!

மருமகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கியதாக மாமனார் மீது புகார் கணவர் மற்றும் மாமியார் மீதும் வழக்கு!

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி பகுதியில் காதல் திருமணம் செய்த இளம்பெண்ணை அவரது மாமனார் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. கூட்டுக் குடும்பமாக வசித்து வந்த நிலையில், கடந்த 3 மாதங்களாக மாமனார் செல்வகுமார் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், இதனால் அந்த இளம்பெண் 2 மாத கர்ப்பமாக இருப்பதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த சம்பவம் குறித்து கணவர் ஸ்ரீவிக்னேஷ் மற்றும் மாமியார் ராஜேஸ்வரியிடம் தெரிவித்தபோது, அவர்கள் மாமனாருக்கு ஆதரவாக பேசியதாக கூறப்படுகிறது. மேலும், இந்த விவகாரத்தை வெளியே தெரிவித்தால் மாமனார் தற்கொலை செய்து கொள்வார் எனக் கூறி இளம்பெண்ணை மிரட்டியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 

இதற்கிடையில், கருக்கலைப்பு செய்வதற்காக இளம்பெண் தக்கலை அரசு மருத்துவமனைக்குச் சென்றபோது, மருத்துவர்களிடம் தனது கர்ப்பத்திற்கான காரணத்தை தெரிவித்துள்ளார். இதையடுத்து மருத்துவமனை நிர்வாகம் காவல்துறைக்கு தகவல் அளித்ததைத் தொடர்ந்து, போலீசார் விசாரணையை தொடங்கினர்.

 

இளம்பெண் அளித்த புகாரின் அடிப்படையில் மாமனார் செல்வகுமார், கணவர் ஸ்ரீவிக்னேஷ் மற்றும் மாமியார் ராஜேஸ்வரி ஆகிய 3 பேர் மீதும் மணவாளக்குறிச்சி போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வழக்குப்பதிவு செய்யப்பட்டதை அறிந்த மூவரும் தலைமறைவானதாக கூறப்படும் நிலையில், அவர்களை கைது செய்ய 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் நடைபெற்று வருகிறது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.