கோயிலுக்கு வரும் சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறல்; வீடியோக்களை வெளிநாடுகளில் விற்றதாகப் பூசாரி மீது புகார்!

உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள கோயில் ஒன்றில் பூசாரியாகப் பணியாற்றி வந்தவர் ஷியாம் பீகாரி. இவர் கோயிலுக்கு வரும் சிறுமிகளிடம் பிரசாதம் தருவதாகக் கூறி தனி அறைக்கு அழைத்துச் சென்று, அவர்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதுடன், அதனை வீடியோவாகப் பதிவு செய்ததாகப் புகார் எழுந்துள்ளது.
மேலும், சிறுமிகள் தொடர்பான அந்த வீடியோக்களை வெளிநாடுகளில் வசிக்கும் நபர்களுக்கு விற்பனை செய்ததாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல் சர்வதேச காவல்துறை அமைப்பு மூலமாக மத்திய அரசுக்குத் தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தப் புகார்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




கருத்துகள் (0)