நடிகர் தன்வீர் மீது தர்ஷன் மனைவி விஜயலட்சுமி கிரிமினல் மானநஷ்ட வழக்கு!

கன்னடத் திரையுலக நடிகர் தர்ஷன், ரசிகர் சித்ரதுர்கா ரேணுகாசாமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வருகிறார். இந்த நிலையில், தர்ஷனின் குடும்பத்தினர் குறித்து நடிகர் தன்வீர் அவதூறாகப் பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, தன்வீருக்கு எதிராக தர்ஷனின் மனைவி விஜயலட்சுமி பெங்களூரு சிட்டி சிவில் மற்றும் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நேற்று கிரிமினல் மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும், தன்வீர் பேசியதாகக் கூறப்படும் ஆடியோ பதிவுகளையும் ஆதாரமாக நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் 30-ம் தேதி நடத்த உத்தரவிட்டுள்ளது.




கருத்துகள் (0)