திருட்டுச் சந்தேகத்தில் சிறுவன் மீது கொடூரத் தாக்குதல் – உத்தரப் பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூரில், திருட்டுச் சந்தேகத்தின் பேரில் சிறுவன் ஒருவன் கொடூரமாகத் தாக்கப்பட்டு, தரையில் வீசியடிக்கப்பட்டு, கயிற்றால் கட்டப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிறுவனிடம் இருந்து திருடப்பட்டதாகக் கூறப்படும் எந்தப் பொருளும் கைப்பற்றப்படாத நிலையில், வெறும் சந்தேகத்தின் அடிப்படையிலேயே அவர் மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு, சிறுவன் மீது இத்தகைய கொடூரமான தாக்குதலை நடத்திய சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்துத் தகவலறிந்த காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, சிறுவனைத் தாக்கிய நபர்களைக் கைது செய்வதற்கான தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.




கருத்துகள் (0)