சமயச் சடங்கு தொடர்பான தகராறு: 10 வயது மகனை அடித்துக் கொன்ற தந்தை!

குஜராத் மாநிலம் அகமதாபாத் மாவட்டத்தில், குடும்பத்தின் சமயச் சடங்கு பாரம்பரியம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையில் 10 வயது சிறுவன் தனது தந்தையால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயில் அருகே சிறுவனின் கால்களைப் பிடித்து தரையில் அடித்ததுடன், மரக்கட்டையால் அவரது தலையிலும் தந்தை தாக்கியதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தனது மகன் ‘புவோ’ என்ற சமயச் சடங்குடன் தொடர்புடைய நிலைக்கு மாறுவதைத் தந்தை விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. இந்தச் சடங்கில் ஈடுபடக் கூடாது எனக் கூறி சிறுவனுடன் ஏற்பட்ட வாக்குவாதம் வன்முறையாக மாறி, இறுதியில் கொலையில் முடிந்ததாகத் தெரிகிறது.
இதற்கிடையே, சிறுவனைக் கொலை செய்ததாகக் கூறப்படும் தந்தை, ரத்த வெள்ளத்தில் கிடந்த மகனின் உடலுக்கு அருகிலேயே கட்டிலில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தபோது காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், கொலைக்கான காரணம் மற்றும் சம்பவத்தின் பின்னணி குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




கருத்துகள் (0)