செவ்வாய், நவம்பர் 03, 2026
உண்மையின் குரல்
தொழில்நுட்பம்

7,000mAh பேட்டரி, 3 நாட்கள் பயன்பாடு! புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்த ஒன்பிளஸ்!

7,000mAh பேட்டரி, 3 நாட்கள் பயன்பாடு! புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்த ஒன்பிளஸ்!

நீண்ட நேரம் பேட்டரி நீடிக்கும் ஸ்மார்ட்போனை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில், ஒன்பிளஸ் நிறுவனம் புதிய என் லைட் 4ஜி (N Lite 4G) ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தப் போனில் 6.75 அங்குல திரை மற்றும் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம் இடம்பெற்றுள்ளன.

 

இதன் முக்கிய சிறப்பம்சமாக 7,000 எம்.ஏ.எச். திறன் கொண்ட பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் மூன்று நாட்கள் வரை பயன்படுத்த முடியும் என ஒன்பிளஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த பேட்டரியின் செயல்திறன் ஆறு ஆண்டுகள் வரை நீடிக்கும் என்றும் நிறுவனம் கூறியுள்ளது. பிற சாதனங்களுக்கும் மின்சாரம் வழங்கும் வகையில் 5 வாட்ஸ் ரிவர்ஸ் சார்ஜிங் வசதியும் இதில் இடம்பெற்றுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.