செவ்வாய், நவம்பர் 03, 2026
உண்மையின் குரல்
லைஃப்ஸ்டைல்

லக்கேஜ் கட்டணத்தைத் தவிர்க்க 10 கிலோ ஆடைகளை உடலில் அணிந்த பெண்? வைரல் வீடியோ குறித்து வெளியான உண்மை!

லக்கேஜ் கட்டணத்தைத் தவிர்க்க 10 கிலோ ஆடைகளை உடலில் அணிந்த பெண்? வைரல் வீடியோ குறித்து வெளியான உண்மை!

விமானப் பயணத்தின்போது கூடுதல் லக்கேஜ் கட்டணம் செலுத்துவதைத் தவிர்க்க, பெண் ஒருவர் தனது உடலில் அதிக அளவிலான ஆடைகளை அடுக்கடுக்காக அணிந்துகொண்டதாகக் கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. 10 கிலோ ஆடைகளை உடலில் அணிந்து விமான நிலையத்திற்குச் சென்றதாக இந்த வீடியோ தொடர்பாகப் பகிரப்படும் தகவல் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

 

ஆனால், இந்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், காட்சிகள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டவை என உண்மைச் சரிபார்ப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. வீடியோவில் கூகுளின் SynthID அடையாளம் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அது AI மூலம் உருவாக்கப்பட்ட அல்லது மாற்றியமைக்கப்பட்ட உள்ளடக்கம் என்பது தெரியவந்துள்ளது. எனவே, பெண் ஒருவர் உண்மையிலேயே விமான நிலையத்தில் இவ்வாறு ஆடைகளை அணிந்து லக்கேஜ் கட்டணத்தைத் தவிர்த்தார் என்ற தகவலை உறுதிப்படுத்த முடியாது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.