‘புற்றுநோய் வென்றுவிட்டது.. இதுவே என் கடைசி தீபாவளி’ – இளைஞரின் உருக்கமான பதிவு!

குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்றும் எதிர்பார்த்த பலன் கிடைக்காமல் தவித்து வரும் இளைஞர் ஒருவர், ‘புற்றுநோய் வென்றுவிட்டது, இதுவே என் கடைசி தீபாவளி’ என உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.
தனது வாழ்க்கையில் உலகைச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல ஆசைகள் இருந்ததாகவும், அவற்றை நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தனது பதிவில் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
அவரது இந்த உருக்கமான பதிவு சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் மிகுந்த மனவேதனை அடைந்து, இளைஞருக்காகக் கண்ணீர் மல்கப் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.




கருத்துகள் (0)