அமைச்சர் ஜெகதீஸ்வரியின் டாட்டூவை முன்வைத்து திமுக ஐடி விங் விமர்சனம்!

அமைச்சர் ஜெகதீஸ்வரியின் கையில் பனையூர் மூர்த்தி புகைப்பிடிப்பது போன்ற உருவம் பச்சைக் குத்தப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டு, திமுக ஐடி விங் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளது. இத்தகைய டாட்டூவைப் பெருமையாகக் காட்டிக்கொண்டு இருக்கும் அவருக்கு, மாணவர்களின் ஒழுக்கம் குறித்து பேச என்ன தார்மீக உரிமை இருக்கிறது என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.
இதுதொடர்பாக திமுக ஐடி விங் தனது எக்ஸ் தளப் பதிவில், மாணவர்களின் எதிர்காலத்தை உருவாக்க வேண்டிய பள்ளிகளில் அவர்களின் மனநிலையையும் தோற்றத்தையும் பாதிக்கும் வகையில் பேசுவதற்கு அமைச்சருக்கு என்ன தகுதி இருக்கிறது எனக் குறிப்பிட்டுள்ளது. மேலும், மற்றவர்களுக்கு அறிவுரை கூறுவதற்கு முன்பாக தனது கையில் உள்ள டாட்டூவை முதலில் அழிக்க வேண்டும் என்றும் அந்தப் பதிவில் விமர்சித்துள்ளது.




கருத்துகள் (0)