செவ்வாய், நவம்பர் 03, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

தமிழகம் முழுவதும் 245 டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள் சஸ்பெண்ட்! 1,729 பேருக்கு நோட்டீஸ்!

தமிழகம் முழுவதும் 245 டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள் சஸ்பெண்ட்! 1,729 பேருக்கு நோட்டீஸ்!

தமிழகம் முழுவதும் கடைகளைத் திறக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி, 245 டாஸ்மாக் மேற்பார்வையாளர்களைப் பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 1,729 மேற்பார்வையாளர்களிடம் விளக்கம் கேட்டு அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

 

டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டப் பணிகளில் விற்பனையாளர்களையும் ஈடுபடுத்துவதற்கு ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதைக் கண்டித்து பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெறுவதால், ஏராளமான டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக மதுபானம் வாங்கச் செல்லும் வாடிக்கையாளர்கள் சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.