திங்கள், அக்டோபர் 12, 2026
உண்மையின் குரல்
சமையல்

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சில்லி பரோட்டா – வீட்டிலேயே சுவையாக செய்வது எப்படி?

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சில்லி பரோட்டா – வீட்டிலேயே சுவையாக செய்வது எப்படி?

 

 

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடும் சில்லி பரோட்டாவை வீட்டிலேயே எளிய முறையில் செய்து அசத்தலாம். முதலில் வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி மற்றும் குடமிளகாய் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பின்னர் தக்காளி சாஸ், மிளகாய்த்தூள் மற்றும் தேவையான மசாலாத் தூள்களைச் சேர்த்து கிளறிக்கொள்ள வேண்டும்.

 

அடுத்ததாக, சிறிய துண்டுகளாக உதிர்த்து வைத்துள்ள பரோட்டாவைச் சேர்த்து, மசாலா அனைத்துப் பகுதிகளிலும் நன்றாகப் படும்படி கிளற வேண்டும். இறுதியாக நறுக்கிய கொத்தமல்லித் தழையைத் தூவி இறக்கினால், சுவையான சில்லி பரோட்டா தயார்! மாலை நேரச் சிற்றுண்டியாகவோ, இரவு உணவாகவோ இதைச் செய்து குடும்பத்தினருடன் ரசித்து சாப்பிடலாம்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.