வெள்ளி, நவம்பர் 27, 2026
உண்மையின் குரல்
அரசியல்

குடிநீர் கோரி மனு அளிக்கச் சென்றவரை தாக்கியதாக புகார் துணை சபாநாயகர் மீதான வழக்கு டிசம்பர் 2க்கு ஒத்திவைப்பு!

குடிநீர் கோரி மனு அளிக்கச் சென்றவரை தாக்கியதாக புகார் துணை சபாநாயகர் மீதான வழக்கு டிசம்பர் 2க்கு ஒத்திவைப்பு!

திருச்சி மாவட்டம் துறையூரைச் சேர்ந்த கார்த்திக்குமார், குடிநீர் வசதி ஏற்படுத்தித் தரக்கோரி கோரிக்கை மனு அளிக்கச் சென்றபோது, துணை சபாநாயகர் ரவிசங்கர் தன்னை தாக்கியதுடன் மிரட்டல் விடுத்ததாக குற்றம்சாட்டியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக துணை சபாநாயகர் ரவிசங்கர் மற்றும் சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.

 

இந்த மனு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் பதில் அளிக்க கூடுதல் கால அவகாசம் கோரப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அரசு தரப்பின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி திலகவதி, வழக்கின் விசாரணையை டிசம்பர் 2ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

 

குடிநீர் வசதி கோரி மனு அளிக்கச் சென்றபோது தாக்குதல் மற்றும் மிரட்டல் விடுக்கப்பட்டதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பான இந்த வழக்கில், அடுத்தகட்ட விசாரணையில் அரசு தரப்பு என்ன பதில் அளிக்கிறது என்பது கவனிக்கப்படுகிறது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.