கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் வழக்கு இன்று பிற்பகல் விசாரணை!

கள்ளக்குறிச்சி தொகுதி தமிழக வெற்றிக் கழக (தவெக) எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீதான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (நவ.27) விசாரணைக்கு வர உள்ளது. இந்த வழக்கு பிற்பகல் 3.30 மணிக்கு விசாரிக்கப்படும் என நீதிபதி அறிவித்துள்ளார். விசாரணை நேரடியாக நீதிமன்றத்தில் நடைபெறாமல், வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணையின்போது கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்களுக்கு மட்டுமே விசாரணையில் பங்கேற்க அனுமதி அளிக்கப்படும் என்றும், மற்ற நபர்கள் நீதிமன்ற விசாரணையை காணவோ அல்லது அதில் பங்கேற்கவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
பெண் ஐஏஎஸ் அதிகாரி அளித்த புகாரை அடிப்படையாகக் கொண்டு இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதால், நீதிமன்றத்தில் இன்று நடைபெறவுள்ள விசாரணை அரசியல் மற்றும் நிர்வாக வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது. வழக்கின் விசாரணையில் நீதிமன்றம் என்ன உத்தரவு பிறப்பிக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.




கருத்துகள் (0)