ஞாயிறு, அக்டோபர் 18, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

மருதுபாண்டியர் நினைவு தினம், தேவர் குருபூஜை: சிவகங்கையில் 144 தடை உத்தரவு!

மருதுபாண்டியர் நினைவு தினம், தேவர் குருபூஜை: சிவகங்கையில் 144 தடை உத்தரவு!

 

 

மருதுபாண்டியர் நினைவு தினம் மற்றும் முத்துராமலிங்க தேவர் குருபூஜையை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டம் முழுவதும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வரும் 27ஆம் தேதி மருதுபாண்டியர் நினைவு தினமும், 30ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் குருபூஜையும் நடைபெற உள்ளன. இதையொட்டி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

 

இதன்படி, வரும் 20ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை பாரதிய நாகரிக் சுரக்‌ஷா சன்ஹிதா (BNSS) சட்டத்தின் 163வது பிரிவின் கீழ் தடை உத்தரவு அமலில் இருக்கும் என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார். விழாக்களின் போது அசம்பாவிதங்களைத் தவிர்த்து அமைதியைப் பேணும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.