ரூ.89,999 ஆரம்ப விலையில் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்! 130 கி.மீ. வரை பயணம் செய்யலாம்!

இ-ஸ்பிரின்டோ நிறுவனம் இந்தியச் சந்தையில் தனது புதிய G1 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்கூட்டரின் ஆரம்ப விலை ரூ.89,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப 2.0 kWh, 2.5 kWh மற்றும் 3.0 kWh என மூன்று பேட்டரி தேர்வுகளில் இது கிடைக்கிறது. இதன் அதிகபட்ச விலை ரூ.99,999 என அறிவிக்கப்பட்டுள்ளது.
பேட்டரி திறனைப் பொறுத்து, முழுமையாக சார்ஜ் செய்தால் முறையே 80 கி.மீ., 100 கி.மீ. மற்றும் 130 கி.மீ. வரை பயணிக்கலாம் என நிறுவனம் தெரிவித்துள்ளது. புதிய ஸ்கூட்டருக்கான முன்பதிவும் தொடங்கப்பட்டுள்ளது. இதன் டெலிவரி 2027 ஜனவரி 1ஆம் தேதி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கத் திட்டமிடுபவர்களிடையே இந்த அறிமுகம் கவனம் பெற்றுள்ளது.




கருத்துகள் (0)