செவ்வாய், அக்டோபர் 13, 2026
உண்மையின் குரல்
சினிமா

‘மொத ராத்திரி’ படக்குழுவை நேரில் அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன்!

‘மொத ராத்திரி’ படக்குழுவை நேரில் அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன்!

 

 

இயக்குநர் ராஜா கருப்பசாமி இயக்கத்தில் ரிஷிகாந்த், அனிஷ்மா நடிப்பில் வெளியான ‘மொத ராத்திரி’ திரைப்படம் காதல் மற்றும் நகைச்சுவை கலந்த கதைக்களத்தால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளதாகக் கூறப்படுகிறது. சுமார் ரூ.5 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ.8 கோடி வரை வசூலித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திலும் வெளியாகியுள்ள இப்படம் குறித்துப் பேசப்பட்டு வருகிறது.

 

படத்தின் வரவேற்பைத் தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குநர் ராஜா கருப்பசாமி மற்றும் படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளார். சிறிய பட்ஜெட்டில் உருவாகும் திரைப்படங்களும் ரசிகர்களின் ஆதரவால் கவனம் பெற முடியும் என்பதற்கு இப்படம் ஓர் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளதாகத் திரையுலகினர் மத்தியில் பேசப்படுகிறது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.