செவ்வாய், அக்டோபர் 13, 2026
உண்மையின் குரல்
சினிமா

ஜெயலலிதா கதாபாத்திரத்தில் த்ரிஷா? ‘புரட்சித் தலைவர் எம்ஜிஆர்’ படக்குழு பேச்சுவார்த்தை!

ஜெயலலிதா கதாபாத்திரத்தில் த்ரிஷா? ‘புரட்சித் தலைவர் எம்ஜிஆர்’ படக்குழு பேச்சுவார்த்தை!

 

 

‘புரட்சித் தலைவர் எம்ஜிஆர்’ திரைப்படத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தில் நடிகை த்ரிஷாவை நடிக்க வைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக நடிகர் ஜெ.எம்.பஷீர் தெரிவித்துள்ளார். இப்படம் தொடர்பான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், த்ரிஷா இந்தக் கதாபாத்திரத்தில் நடிப்பாரா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

 

த்ரிஷா தனது மகளின் நெருங்கிய தோழி என்றும், இருவரும் இணைந்து மற்றொரு திரைப்படத்தில் பணியாற்றி வருவதாகவும் ஜெ.எம்.பஷீர் கூறியுள்ளார். மேலும், ஜெயலலிதா கதாபாத்திரத்தில் த்ரிஷா நடித்தால் படம் பெரும் கவனத்தைப் பெறும் எனத் தனது நம்பிக்கையையும் வெளிப்படுத்தியுள்ளார். இருப்பினும், த்ரிஷா நடிப்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.