விஜே சித்துவின் ‘டயங்கரம்’ பட டீசர் நாளை மாலை 3 மணிக்கு வெளியீடு!

பிரபல யூடியூபரான விஜே சித்து கதாநாயகனாக நடித்து, இயக்கியுள்ள ‘டயங்கரம்’ திரைப்படத்தின் டீசர் நாளை மாலை 3 மணிக்கு வெளியாகும் எனப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
வேல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு சித்துகுமார் இசையமைத்துள்ளார். நட்டி, காளி வெங்கட், இளவரசு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஏற்கனவே படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், நடிகராகவும் இயக்குநராகவும் விஜே சித்து எடுத்துள்ள இந்தப் புதிய அவதாரம் ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.




கருத்துகள் (0)