மகளின் காதல் திருமணத்திற்கு உதவிய ஜோதிடர் கொலை.. மிளகாய்ப் பொடியைத் தூவி அரிவாளால் வெட்டிய தந்தை கைது!

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் சடல்கா பகுதியில், தனது மகளின் காதல் விவகாரத்தில் தலையிட்டு திருமணத்திற்கு உதவிய ஜோதிடர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த தீபக் என்பவர் தனது மகள் அனுஜாவின் காதலுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். இந்த நிலையில், காதலர்களின் விருப்பத்திற்கு ஆதரவாக இருந்த ஜோதிடர் அஜித், இருவருக்கும் திருமணம் செய்து வைக்க உதவியதாகக் கூறப்படுகிறது.
இதனால் ஜோதிடர் மீது ஆத்திரமடைந்த தீபக், அவரைக் கொலை செய்யத் திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது. இதன்படி, ஜோதிடர் அஜித்தை வரவழைத்த தீபக், முதலில் அவர் மீது மிளகாய்ப் பொடியைத் தூவி, பின்னர் அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் அஜித் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய காவல்துறையினர், கொலைக் குற்றச்சாட்டின் பேரில் தீபக்கைக் கைது செய்துள்ளனர்.




கருத்துகள் (0)