பெங்களூருவில் பைக் டாக்சி கட்டணம் ரூ.384 தர மறுத்த இளம்பெண்?

பெங்களூருவில் மழைக்காலத்தில் பைக் டாக்சி முன்பதிவு செய்த இளம்பெண், சுமார் ஒன்றரை மணி நேரப் பயணத்திற்குப் பிறகு இலக்கை அடைந்ததாகக் கூறப்படுகிறது. பயணத்தை முடித்த ஓட்டுநர் ரூ.384 கட்டணம் கேட்டபோது, அந்தப் பெண் பணம் செலுத்தாமல் சென்றதாகவும், பணம் கேட்ட ஓட்டுநரிடம் மிரட்டும் வகையில் பேசியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் மனமுடைந்த ஓட்டுநர் சம்பவம் தொடர்பாக வீடியோ பதிவு செய்ததாகவும், அந்தக் காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருவதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, ஓட்டுநருக்குக் கட்டணம் வழங்க வேண்டும் எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், சம்பவத்தின் முழுப் பின்னணி மற்றும் இரு தரப்பினரின் விளக்கங்கள் உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே உண்மை நிலையைத் தெளிவாக அறிய முடியும்.




கருத்துகள் (0)