“போராட்டக்காரர்களை உடனே விடுவிக்க வேண்டும்” – மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்ற தகவல்கூட தெரிவிக்காமல் அவர்களைச் சிறைபிடித்து வைத்திருப்பது சட்டவிரோதமானதும் மனிதாபிமானமற்றதுமான செயல் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். போராட்டங்களை ஒடுக்க முயற்சிப்பதற்குப் பதிலாக, தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை ஒன்றிய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், ஒரு இயக்கத்தை நசுக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகள் அந்த இயக்கத்தை மேலும் வலிமையாக்கும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என்றும், இந்த விவகாரத்தில் பாஜக அரசுக்கு வேறு வழியில்லை என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். ஸ்டாலினின் இந்தக் கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளன.




கருத்துகள் (0)