“அதிமுகவிலிருந்து யாரும் வெளியேற மாட்டார்கள்” – எஸ்.பி.வேலுமணி திட்டவட்டம்!

அதிமுகவிலிருந்து மேலும் 15 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்வார்கள் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாக வெளியான தகவல் குறித்து, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், அதிமுகவிலிருந்து யாரும் வெளியேற மாட்டார்கள் என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
மேலும், செங்கோட்டையன் ஏன் இதுபோன்ற கருத்தைத் தெரிவித்தார் என்பது குறித்து அவரிடமே கேட்க வேண்டும் என்றும் எஸ்.பி.வேலுமணி கூறினார். அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கட்சியிலிருந்து விலகுவார்கள் என்ற தகவல்களுக்கு மத்தியில், அவரது இந்தப் பதில் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.




கருத்துகள் (0)