புதிய ColorOS 17 அறிமுகம்: Oppo Find X10 சீரிஸில் முதலில் கிடைக்கும் அப்டேட்!

ஓப்போ நிறுவனம் தனது புதிய ColorOS 17 மென்பொருளை அறிமுகம் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் புதிய இயங்குதள அப்டேட் முதற்கட்டமாக Oppo Find X10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் வழங்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் ஓப்போ ஸ்மார்ட்போன் பயனர்கள் மத்தியில் புதிய மென்பொருள் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
முன்னதாக ஓப்போ, ஒன்பிளஸ் மற்றும் ரியல்மி ஆகிய நிறுவனங்களின் மென்பொருள் தளங்களை ColorOS 17 என்ற ஒரே அமைப்பின் கீழ் ஒருங்கிணைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் புதிய அப்டேட் தொடர்பான தகவல்கள் தொழில்நுட்பத் துறையில் கவனத்தை ஈர்த்துள்ளன. இருப்பினும், எந்தெந்த மாடல்களுக்கு எப்போது அப்டேட் வழங்கப்படும் என்பது குறித்த முழுமையான விவரங்கள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட வேண்டும்.




கருத்துகள் (0)